பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு 72 மணித்தியாலங்கள் காலக்கெடு ..!!

NEWS
0 minute read
0


பிரதமர் ரணில் விக்ரமசிங்க 72 மணித்தியாலங்களுக்குள் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை ஜனநாயக மக்கள் சக்தி இயக்கத்தின் தலைவர் எம்.என்.எம்.ஹசீம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் -20- இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க என்ன செய்கிறார்?

தற்போது அவர் இல்லாத சட்டத்திட்டங்களை கொண்டு வந்து, தலைமைத்துவதற்கு வருவதற்கு எல்லா மக்களினதும் அன்பை பெற்ற சஜித் பிரேமதாஸ வருவதை தடை செய்வதற்காக எல்லா விதமான சூழ்ச்சிகளையும் செய்து வருகிறார்.

ஆனாலும் எதிர்வரும் 72 மணித்தியாலங்களுக்குள் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும்.

இல்லையென்றால் மக்கள் அனைவரும் இணைந்து வீதிக்கு இறங்கி போராடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)