கிழக்கு மாகாண மீலாதுன் நபி விழா நிகழ்வுகள் நடைபெற்றது..!

- பாறுக் ஷிஹான் -
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் கிழக்கு மாகாண கல்விதிணைக்களம் ஏற்பாடு செய்த மீலாதுன் நபி விழா வைபவம் ஞாயிற்றுக்கிழமை(22) கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரி சேர் ராசீக் பரீட் மண்டபத்தில் நடை பெற்றது.

மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம் மன்சூர் கலந்து கொண்ட  இவ் வைபவத்தில் கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணாமலை  மட்டக்களப்பு அம்பாறை  மாவட்டங்களில் உள்ள  17 வலயக்  கல்வி அலுவலக  மாணவர்கள் கலந்து கொண்டனர் .

 மூன்று மாவட்டத்திலும் உள்ள வலய கல்விப்பணிப்பாளர்கள்  ,பிரதி கல்விப் பணிப்பாளர்கள், உதவி கல்விப் பணிப்பாளர்கள்,கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள் , ஆசிரிய ஆலோசகர்கள்,அதிபர்கள்,ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் என ஏராளமானோர்  வைபவத்தில் கலந்து கொண்டனர்.

மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகள் இங்கு இடம் பெற்றதோடு போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  சான்றிதழ்  வழங்கி வைக்கப்பட்டது .
கிழக்கு மாகாண மீலாதுன் நபி விழா நிகழ்வுகள் நடைபெற்றது..!  கிழக்கு மாகாண மீலாதுன் நபி விழா நிகழ்வுகள் நடைபெற்றது..! Reviewed by NEWS on September 22, 2019 Rating: 5