சுதந்திர கட்சியை அழிக்கும் முயற்சி தோற்கடிக்கப்படும் - சந்திரிக்கா..!ஜனாதிபதி தேர்தலின் ஆதரவு வழங்குவது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுத்த தீர்மானத்திற்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சுதந்திர கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா குமாரதுங்க அறிக்கை ஒன்றின் ஊடாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது.

இதனை வன்மையாக கண்டித்துள்ள சந்திரிக்கா, அதனை முறியடிக்க நடவடிக்கை எடுக்கும் என அறிவித்துள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ம் திகதி பொதுஜன கட்சியுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் சுதந்திர கட்சியை நிர்மூலமாக முற்படும் முயற்சியை தோற்கடிக்கப்படும் என சந்திரிக்கா சூளுரைத்துள்ளார்.

தற்போது லண்டன் சென்றுள்ள சந்திரிக்கா விரைவில் நாடு திருப்பவுள்ளார். இதன்போது சுதந்திர கட்சியின் ஆதரவாளர்களுடன் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
சுதந்திர கட்சியை அழிக்கும் முயற்சி தோற்கடிக்கப்படும் - சந்திரிக்கா..! சுதந்திர கட்சியை அழிக்கும் முயற்சி தோற்கடிக்கப்படும் - சந்திரிக்கா..! Reviewed by NEWS on October 15, 2019 Rating: 5