பிரதான செய்திகள்

நசீரை வெட்ட களமிறங்கிய பைஷல் காசீம் : அரசியல் அஸ்தமனத்தை நோக்கி உதுமாலெப்பைசிரேஷ்ட ஊடகவியலாளர் நிலாம்டீன் 

நாங்க காடு சுற்றி நாடு சுற்றி வந்திருக்கோம் கேட்டை திறந்து விடுங்கோ ..

கிழக்கு மாகாண அட்டாளைச்சேனையின் முன்னாள் அமைச்சர் M.S. உதுமாலெப்பை நாளை காலை ஹக்கீம் கட்சியில் உத்தியோகபூர்வமாக ஹக்கீம் முன்னிலையில் இணைகின்றார்!.

அதே போன்று கல்முனை ஜெமீல் முன்னாள் MPC ஹக்கீம் முன்னிலையில் இணைகின்றார்!

ஜெமீல் அமைச்சர் ரிசார்ட் கட்சியில் இணைந்து தன்மீது இருந்த கடன் சுமைகளை இறக்கி விட்டு மீண்டும் ஆப்பேசு தாய் வீட்டுக்கு வருகின்றார்.

கடந்த 19 ஆண்டுகளாக அக்கரைப்பற்று முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் கட்சியில் உதுமாலெப்பை இணைந்து கொண்டு அட்டாளைச்சேனையில் ஹக்கீம் கட்சி ஆதரவாளர்களுக்கு எதிராக மிக அதிகமான பொலிஸ் முறைப்பாடு > கைது> சிறை என்று நாசகார செயல்களில் ஈடுபட்டு அட்டாளைச்சேனையில் ஹக்கீம் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் மிகவும் வெறுக்கப்பட்ட ஒருவர்தான் உதுமாலெப்பை.

உதுமாலெப்பையினால் அரங்கேற்றம் செய்யப்பட்ட பல போலியான வழக்குகளில் சிக்குப்பட்ட பலர் இன்னும் வழக்கு கோடு என்று அலைந்து கொண்டிருக்கின்றாகள் .

இந்த நிலையில்தான் நாளை காலை கொழும்பில் ஹக்கீம் கட்சியில் உத்தியோகபூர்வமாக ஹக்கீம் முன்னிலையில் இணைகின்றார்!.

ஆனால் உதுமாலெப்பை ஹக்கீம் கட்சியில் இணைவதை அட்டாளைச்சேனையில் ஆரம்பகால SLMC ஆதரவாளர்கள் ஒரு போதும் விரும்பவில்லை .

ஆனால் நிந்தவூர் பைசல் காசிம் MP >கல்முனை ஹரீஸ் MP>சம்மாந்துறை மன்சூர் MP ஆகியோர் உதுமாலெப்பையை ஹக்கீம் கட்சிக்குள் கொண்டு வருவதற்கு கடந்த 4 மாதங்களாக பெரும் முயற்சிகளில் ஈடுபட்டு நாளை வெற்றி என்னும் அறுவடை காண்கின்றாகள்.

அட்டாளைச்சேனை இலவச MP நசீரின் வளர்ச்சிக்கு எதிராக உதுமாலெப்பையைக் கொண்டு குழி பறிக்க வெட்டுக் குத்து செய்ய இந்த அறுவடை வெற்றி என்று சொல்லலாம்.

ஆனால் குறிப்பாக நிந்தவூர் பைசல் காசிம் MP உதுமாலெப்பையைக் கொண்டு வெட்டிய குழிக்குள் அடுத்த வருடம் மே மாதம் கடந்து விழுவார் / தோல்வி காணுவார் என்பது ஆரூடம்.

இந்தக் கேவலம் கெட்ட அரசியலுக்காக அதாவுல்லாவை மகிழ்விக்க சொந்த ஊரவன் என்றும் பார்க்காமல் உதுமாலெப்பை அட்டாளைச்சேனையில் பொலிஸ் துணையோடு காட்டிய கூத்துக்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

அதாவுல்லாஹ் உதுமாலெப்பைக்கு போட்ட மாகாண அமைச்சர் என்ற பிச்சைப் பதவி மூலமாக தனக்கு கிடைத்த அத்தனை வீதி கட்டிடம் மற்றும் ஏனைய கொந்தராத்துக் களையும் கிண்ணியாவில் கமிசன் கொந்தராத்துக் காரர்களுக்கு கொடுத்து நல்ல பணம் பார்த்தார்.

ஆனால் உழைத்த அத்தனை பணமும் அதாவுல்லாவுக்காக/கட்சிக்காக செலவு செய்து இப்போது வீசிய கையும் வெறும் கையோடு உதுமாலெப்பை உள்ளார்.

அதாவது உதுமாலெப்பை 1987 ஆம் ஆண்டுவாக்கில் இருந்த நிலை .அதாவது சீரோ 0 நிலை. ஹக்கீம் யாருக்கும் பணம் கொடுப்பதில்லை .

ஹக்கீம் கட்சிக்குள் வர விரும்புவோர் தங்கள் சொந்தப் பணம் கொண்டு சகல செலவும் செய்ய வேண்டும் .

அந்த வகையில் உதுமாலெப்பை இனிமேல் சீரோ நிலயில் இருந்து சொந்தப் பணம் கொண்டு சகல செலவுகளும் செய்து அரசியலில் எழும்ப வேண்டும்.. இது கொஞ்சம் கஷ்டமான பயணம் .பாலைவனப் பயணம் ....

இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மாகாண தேர்தலில் செலவு இன்றி சுலபமாக வெற்றி பெறலாம் என்ற நோக்கில் நாளை காலை ஹக்கீம் கட்சியில் உத்தியோகபூர்வமாக உதுமாலெப்பை தனது பரிவாலங்களோடு ஹக்கீம் முன்னிலையில் இணைகின்றார்!.

நேற்று வரைக்கும் ஹக்கீமை தூற்றிய தூற்றல் இன்னும் காயவில்லை ..

சே என்ன மானங்கெட்ட அரசியல்டா!..

ஆனாலும் உதுமாலெப்பை ஏன் இந்த அவசரம்? ஜனாதிபதி தேர்தல் முடிந்து தனது முடிவை எடுத்திருக்கலாம் .

2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மாகாண தேர்தலுக்காக இந்த முந்திரிக்கொட்டை பாய்ச்சல் தேவையா ?

நாளையுடன் உதுமாலெப்பையின் அரசியல் ஒரு அஸ்தமனத்தை நோக்கிய பயணமாக அமையும்!

கிண்ணியாவில் ஒரு உள்ளூர் முந்திரிக்கொட்டை அரசியல்வாதி ஹக்கீம் கட்சியில் இணைந்து முகவரி இல்லாமல் மூழ்கி விட்டது./ தொலைந்து விட்டது ..

அட்டாளைச்சேனையின் உதுமாலெப்பை என்னும் மாகாண அரசியல்வாதி முகவரி இல்லாமல் மூழ்கிவிடப் போகுது...

ஹக்கீம் கட்சிக்குள் உதுமாலெப்பை மாகாண தேர்தலில் வெற்றி பெற முடியுமா என்பதை அடுத்த ஆண்டில் பார்ப்போம்...

--------------

உதுமாலெப்பை ஹக்கீம் கட்சியில் இணைவர் எதிர்வரும் மாகாண தேர்தலில் ஹக்கீம் கட்சியில் இருந்துதான் உதுமாலெப்பை குதிப்பார் என்று கடந்த மாதம் அட்டாளைச்சேனையின் ஆரம்பகால SLMC பிரமுகர் மற்றும் முன்னாள் சேர்மன் காதர் ஆகியோரிடம் நான் கூறிய போது இதை ஜீரணிக்க முடியாமல் ஏதோ நான்தான் உதுமாலெப்பையை ஹக்கீம் கட்சிக்குள் கொண்டு வருவது போல் என்மீது எகிறிப்பாய்ந்தது முறுகிக் கொண்டார்கள் ..தற்போது உதுமாலெப்பையிடம் கைகுலுக்க கொழும்பு போய்க்கொண்டிருக்கின்றார்கள்,

நான் உண்மையை சொன்ன போது ஏற்றுக்கொள்ளவில்லை இந்த பண்டித மேதைகள் ....இப்போது ஒட்டி உறவாட கொழும்பு பயணம் ..ஹி..ஹி..

நான் யதார்த்தமான உண்மை நிலையினை தந்துள்ளேன்.யாராவது மல்லுக்கு வந்தால் வந்த வழியே ஓடிப் போய் விட வேண்டும் ....
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
News
News

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget