பிரதான செய்திகள்

பொதுச் சேவைக்கு லஞ்சம் பெறும் அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரி!

வீதி நிர்மாணத்துக்கான ஒப்பந்த வேலையொன்றினை வழங்குவதில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் பாரிய மோசடியொன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த வேலைக்காக ஒப்பந்ததாரரைத் தெரிவு செய்யும் பொருட்டு பகிரங்கமாக விலை மனுக்கோரும் அறிவித்தலை விடுக்க வேண்டிய போதும், ரகசியமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இவ்வாறு பெறப்பட்ட விலை மனுக்களைத் திறக்கும் நடவடிக்கை, நேற்று முன்தினம் திங்கட்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பேற்றமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, இந்த வேலைக்காக விண்ணப்பிக்கக் காத்திருந்தவர்கள், இது குறித்து அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் உரிய அதிகாரிகளிடம் விசாரித்த போது, குறித்த வேலைக்காக ஒப்பந்தகாரர்களிடமிருந்து விலை மனுக்களைப் பெற்றுக் கொள்வதற்காக, தாம் எழுத்து மூலம் பகிரங்க அறிவித்தல் விடுத்திருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

ஆனால், அவ்வாறு எந்தவொரு பகிரங்க அறிவித்தலும் விடுக்கப்பட்டிருக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.

ஒப்பந்த வேலைகளை வழங்கும் பொருட்டு, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திலுள்ள சில முக்கிய அதிகாரிகள், ஒப்பந்தகாரர்களிடமிருந்து பெருந்தொகைப் பணத்தை லஞ்சமாகப் பெற்றுவருவதாக தொடர்சியான புகார்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு லஞ்சம் பெறும் அதிகாரிகள் பற்றிய விவரங்களையும், அதனை நிரூபிக்கும் வகையிலான சான்றுகளையும் ‘புதிது’செய்தித்தளம் தேவையானபோது வெளிப்படுத்தத் தயாராகவுள்ளது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் ஒப்பந்த வேலை வழங்குவதில் மோசடி இடம்பெற்ற செய்திகள் வெளியானமையினை அடுத்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக, இது தொடர்பில் முழுமையான தகவல்களைக் கேட்டு, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரிடம், ஊடகவியலாளர் மப்ரூக், எழுத்து மூலம் விண்ணப்பமொன்றினை கையளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிது இணையம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
News
News

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget