கோட்டாவை ஆதரிப்பதால் கட்சிக்குள் "குழப்பம்" தயாசிறி..!கோட்டாபே ராஜபக்சவை ஆதரிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்த தீர்மானத்திற்கு கட்சிக்குள்ளேயே பல்வேறு மட்டத்தில் எதிர்ப்பு காணப்படுவதாகவும் அதனால் ஆங்காங்கு குழப்ப நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கிறார் தயாசிறி ஜயசேகர.

எனினும், பெரமுன - சு.க இடையே கொள்கை ரீதியான கருத்தொற்றுமை இருப்பதாகவும் ஆதலால் முன்னேறிச் செல்வதே அவசியம் எனவும் தயாசிறி மேலும் தெரிவிக்கிறார்.

முன்னதாக சின்னத்தையாவது மாற்ற வேண்டும் என சு.க கோரிக்கை விடுத்து வந்த போதிலும் ஈற்றில் நிபந்தனையற்ற ரீதியில் கோட்டாபேவை ஆதரிக்க இணங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...