தாம் பெற்ற பலத்தை பாதுக்குமாறு ரணில் வேண்டுகோள்..!ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்துக்கு வாக்களித்து அவரை எதிர்வரும் நவம்பர் 17 ஆம் திகதி ஜனாதிபதியாக்குங்கள் எனவும் தாம் பெற்ற பலத்தை பாதுக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்தார்.

கொழும்பு – காலி முகத்திடலில் நேற்று(10) இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த சம்மேளனத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்த தினத்திலிருந்து எதிர்த்தரப்பினர் முன்னாள் ஜனாதிபதி ரனசிங்க பிரேமதாசவை விமர்சிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

அவருடன் மிக நெருக்கமான அமைச்சராக சேவையாற்றிய அமைச்சர் என்ற அடிப்படையில் அவற்றுக்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. ரணசிங்க பிரேமதாச உயிருடன் இருந்த காலத்திலும் இவர்களே அவரைத் தாக்கினர். தற்போது அவர் உயிரிழந்த பின்னரும் இவர்கள் தான் அவரைத் தாக்கி பேசுகின்றனர்.

இவ்வாறு தாக்கி பேசுகின்றார்கள் என்பதற்காக அவரது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தப்படவில்லை. ரசணசிங்க மரணித்திருந்தாலும் அவரது பெயர் இன்றும் நிலைத்திருக்கிறது எனவும் பிரதமர் கூறினார்.
தாம் பெற்ற பலத்தை பாதுக்குமாறு ரணில் வேண்டுகோள்..! தாம் பெற்ற பலத்தை பாதுக்குமாறு ரணில் வேண்டுகோள்..! Reviewed by NEWS on October 11, 2019 Rating: 5