பிரதான செய்திகள்

அடுத்த வருட ஹஜ் பயண ஏற்பாடுகளை சிக்கலின்றி முன்னெடுக்க திட்டம்..!அடுத்த வருட ஹஜ் கட­மையை பிரச்­சி­னைகள் எது­வு­மின்றி முன்­னெ­டுப்­ப தற்­கான திட்­டங்­களை வகுத்­துள்­ள­தாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.மலிக் தெரி­வித்தார்.

இத­ன­டிப்­ப­டையில் அடுத்த வரு­டத்­திற்­கான ஹஜ் கட­மையை 25 ஆயிரம் ரூபா மீள கைய­ளிக்கப் படக்­கூ­டிய பதிவுக் கட்­ட­ணத்தைச் செலுத்தி ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் தங்­க­ளது பய­ணத்தை உறுதி செய்­யு­மாறு கோரப்­ப­ட­வுள்­ளார்கள். இது தொடர்பில் பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.மலிக் கருத்து தெரி­விக்­கையில், “ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்கு விண்­ணப்­பித்­த­வர்­களில் சுமார் 6 ஆயிரம் பேர் நிலு­வையில் இருக்­கி­றார்கள். அவர்கள் அனை­வ­ருக்கும் ஹஜ் பய­ணத்தை உறுதி செய்­யு­மாறு விரைவில் கடி­தங்கள் அனுப்பி வைக்­கப்­ப­ட­வுள்­ளன. அடுத்த வரு­டத்­திற்­கான ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் தெரி­வின்­போது ஏற்­க­னவே பதிவுக் கட்­டணம் செலுத்தி காத்­தி­ருக்கும் விண்­ணப்­ப­தா­ரிகள் மற்றும் ஹஜ் முக­வ­ரொருவரின் ஊழல் கார­ண­மாக இறுதி நேரத்தில் ஹஜ் கட­மையைத் தவ­ற­விட்ட 8 ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் என்­போ­ருக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­ப­ட­வுள்­ளது. கடந்த வரு­டங்­களைப் போன்று அடுத்த வருட ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் அவர்கள் விண்­ணப்­பித்­துள்ள ஒழுங்கு முறைக்­கேற்­பவே தெரிவு செய்­யப்­ப­டு­வார்கள்.

ஊழல்­களில் ஈடுபட்ட ஹஜ் முகவர்களுக்கு அடுத்த வருடம் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது. அவர்களுக்கு அனுமதிப்பத்திரம் தடை செய்யப்படும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
News
News

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget