சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் புதிய கூட்டணி - குமார வெல்கம தலைமையில்..!ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாப்பதனை முதன்மை நோக்கமாகக் கொண்டு புதிய கூட்டணி ஒன்றை உருவாக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான குமார வெல்கம இந்த முனைப்புக்களுக்கு தலைமை தாங்கி வருகின்றார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சுமார் பதினைந்து தொகுதி அமைப்பாளர்கள் கொழும்பில் நேற்றைய (10) தினம் கூடி, கோத்தாபயவிற்கு ஆதரவளிப்பதில்லை என தீர்மானித்துள்ளனர்.

இதேவேளை, இந்த சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளனர்.

கோத்தாபயவிற்கு ஆதரவளிப்பது குறித்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்த தீர்மானத்திற்கு கட்சியின் பெரும்பான்மையான தொகுதி அமைப்பாளர்கள் இணங்கவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதகாக்கும் கூட்டணியின் செயலாளர் சட்டத்தரணி ரஜித கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, தொகுதி அமைப்பாளர்கள் 183 பேரை அழைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துரையாடிய போது, இரண்டு பேர் மட்டுமே கோத்தாபயவிற்கு ஆதரவளிக்க வேண்டுமென கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த கூட்டம் தொடர்பில், கட்சியின் செயலாளர் அறிக்கையை வெளியிட்டால் இந்த உண்மை அம்பலமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் புதிய கூட்டணி - குமார வெல்கம தலைமையில்..! சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் புதிய கூட்டணி - குமார வெல்கம தலைமையில்..! Reviewed by NEWS on October 11, 2019 Rating: 5