சஜித்தின் பிரச்சாரம் மந்தகதி - ரணில் மேற்கொண்டுள்ள அதிரடி..!


ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் பிரசார நடவடிக்கைகள் மந்த கதியை அடைந்துள்ள நிலையில், பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்படும் என பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன் காரணமாக சஜித்தின் பிரதான தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தை சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் அமைப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

சஜித் பிரேமதாஸவின் ஊடக நடவடிக்கை மற்றும் தேர்தல் நடவடிக்கைகள் உரிய முறையில் நடைபெறவில்லை என முறைப்பாடு கிடைத்தமையினால் பிரதமரின் நேரடி கண்கானிப்பின் கீழ் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் இந்த தீர்மானத்திற்கு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சஜித் பிரேமதாஸவின் தேர்தல் ஊடக செயற்பாட்டு நடவடிக்கைகளை கொழும்பு கிறின்பார்கில் முன்னெடுப்பதற்கு பிரதமர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

ஊடக நடவடிக்கைகளின் பிரதான இணைப்பாளராக அரச செய்தி திணைக்களத்தின் முன்னாள் இயக்குனர் ரங்க கலசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்ட பின்னர், முதல் பேரணி இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு காலி முகத்திடலில் நடத்தவுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்