ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்; இறுதி அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிப்பு..!


உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் தொடர்பான இறுதி அறிக்கை இன்று (23) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் போன்று மீண்டுமொரு சம்பவம் ஏற்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் தலைவர், பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்திருந்தார்.

குறித்த அறிக்கை 200 பக்கங்களை கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...