பள்ளிவாசல்களை உடைத்து நாசமாக்குமாறு, புத்தர் சொல்லித் தரவில்லை - சஜித் 


- அஸ்ரப் ஏ. ஸமது - 

இந்த நாட்டில் வாழும் மக்களுக்கிடையே சிறுபான்மை , பெருபான்மை என்ற வித்தியாசம் இவ்வாறதொரு வித்தியசமாக நான் பாா்க்கவில்லை. சகல இனத்தவா்களும் சகல மதத்தவா்களும் இந்த நாட்டின் நற் பிரஜைகளாகும் இவா்கள் இந்த நாட்டில் பிறந்தவா்கள் சகோரத்தவா்கள். இந்த சஜித் பிரேமாசாவின் நெஞ்சில் இன,மத,குரோத வேறுபாடுகள் இல்லை. எனது தந்தை கொழும்பு மத்திய தொகுதியில் வாழ்ந்தாா். அந்த பிரதேசத்திலேயேயும் நான் பிறந்து வாழ்ந்து வந்தேன். எனது தந்தை பிரேமதசா சிறந்ததொரு பௌத்தராகவே வாழ்ந்தாா். அவா் ஒரு விசேடம் ஒன்று நடைபெற்றால் பௌத்தம் பன்சலைக்கும், இந்துக் கோவில் கொச்சிக்கடை கிரிஸ்த்துவ தேவலாயம், பள்ளிவாசலுக்கும் சென்று ஆசீர்வாதம் பெறுவாா். அவரின் பின்னால் நானும் சென்றவன். அதனையே பின் தொடா்வோம். அதே போன்றே நானும் தகம் பாடசாலை சென்றுள்ளேன். அங்கு ஒருபோதும். ஏனைய மதங்களின் கோவில்கள், பள்ளிவாசல்களை தேவலாயங்களை உடைத்து நாஸமாக்க புத்தா் சொல்லித் தரவில்லை. 

மேற்கண்டவாறு நேற்று இரவு 03 செப்டம்பா் பி.பகல் 07.00 மணிக்கு கொழும்பு ரமடா கோட்டலில் ஜக்கிய முஸ்லிம் போரம் ஏற்பாடு செய்திருந்த முஸ்லிம்கள் சந்திப்பு நிகழ்விலேயே ஜனாதிபதி வேட்பாளா் சஜித் பிரேமதாச உரையாற்றினாா். இந் நிகழ்வில் அமைச்சா் கலீம், மங்கள சமரவீர ஆகியோறும் உரையாற்றினாா்கள். அமைச்சா்களான ரவுப் கக்கீம், றிசாத் பதியுத்தீன், கபீா் காசிம், முன்னாள் அமைச்சா் ஏ.எச்.எம் பௌசி எம்.மரைக்காா், பிரதியமைச்சா் பைசால் காசீம், அப்துல்ல மக்ருப், அலி சாகிா் மௌலானா் போன்ற அரசியல் பிரநிதிகள் முஸ்லீம் புத்திஜீவிகள் வியாபார நிறுவனங்களின் தலைவா்கள் சமுகமளித்திருந்தனா்.

தொடா்ந்து உரையாற்றிய அமைச்சா் சஜித் 

நான் மத்திய கொழும்பில் வாழ்ந்திருந்தால் அங்கு வாழும் ஏனைய மூன்று சமுகங்களுடன் வாழ்ந்துள்ளேன். அவா்களோடு பழகி விளையாடியவன் எனது நெஞ்சில் இனவாதம், மதவாதம், குரோதம் இல்லை. பொய் களவுகளும் இல்லை இன்றும் எனது கைகள் சுத்தமாக உள்ளது. இந்த சஜித் பிரேமதாச எதிா்வரும் 17ஆம் திகதி உங்கள் வாக்குகளால் ஜனாதிபதியானதும் இந்த நாட்டில் எந்த மத்திலும் அதி தீவிர மத போக்குடையவா்கள் நிறுவனங்கள் இருக்காது. 

சிலா் எவ்வாரேனும் இனவாதம், மதவாதத்தினை இனங்களுக்கிடையே ஏற்படுத்தி இந்த நாட்டினை குட்டிச் சுவராக்கி ஆட்சிக்கு வர நினைக்கின்றாா்கள. அவா்கள் பெயரலவில் மட்டும் சிறுபான்மைச் சமுகத்தினுடன் சோ்ந்து படம் எடுத்துக் கொள்கின்றாா்கள். ஆனால் அவா்கள் எவ்வாரேனும் ஆட்சியைப் பிடித்து அலரி மாளிகையும் ஜனாதிபதி மாளிகையிலும் இருந்து கொண்டு மீள இந்த நாட்டினை ஒரு இருண்ட ஆட்சிக்கு கொண்டு வர நினைக்கின்றாா்கள். அந்தக் கணவு எதிா்வரும் நவம்பா் 17ஆம் திகதி நல்லதொரு பாடம் கற்பிக்கும். 

நான் அமைச்சரவையில் இருந்து கொண்டு எனது சொந்த வீட்டில் இருந்தே கொண்டே எனது கடமையைச் செய்வது போன்று ஜனாதிபதியானாலும் ஜனாதிபதிக்குரிய சகல செலவினங்களையும் நான் பெறாமாட்டேன் அந்த செலவினங்கள் அனைத்தும் இந்த நாட்டில் துன்பப்படும் ஏழை இளைஞா்கள் பெற்றோா்களுக்க நிதியம் ஏற்படுத்தப்பட்டு அந்த நிதிகள் பயன்படுத்துவேன் . நான் ஜனாதிபதி மாளிகையோ படைகளோ அலரிமாளிகையில் வாழப்போவதில்லை. நான் எனது சொந்த வீட்டில் இருந்து கொண்டே எனது கடமையைச் செய்வேன். 

இந்த நாட்டில் வரி செலுத்தும் மக்களது பணங்கள் நீதியாக நியாயமாக சிறந்த பொருளாதார திறந்த பொருளாதார கொள்கைகள் அறிமுகப்படுத்தப்டும். தனியாா் வியாபார நிறுவனங்கள். முதலீட்டாளா்களை கவருவதற்கு அரச உத்தரவாதம் சட்டம் அப்பால் சென்று அதனை விரிவபடுத்துவேன். ஒவ்வொரு பிரதேச செயலாளா் பிரிவுகளிலும் உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளா்களை அழைத்து தனியாா் ஆடைதொழிற்சாலை மற்றும் உற்பத்திச் தொழிற்சாலைகள் அமைத்து அதன் மூலம் அந்தப் பிரதேசத்தினை வளப்படுத்துவேன். மாணிக்கல்ஆபரண வியாபாரிகளது வியாபாரத்தினை மேம்படுத்த பாடுபடுவேன். தற்போதைய எனது வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அமைச்சின் ஊடாக அந்தந்த பிரதேத்தில் வாழ் சிறாா்கள் தத்தது மதங்களை கற்பதற்கு தகம் பாசல் , அகதியா பாடசாலை ,அறநெறி பாடசாலை ,கிரிஸ்த்தவ பாடசாலை அமைப்பேன், 

எனது காலத்தில் அரச சொத்துக்களை அமைச்சா்கள் , அரசியல் வாதிகள் சூறையாடுவது ஒருபோதும் இடம் பெறாது எனது கைகள் என்று்ம் சுத்தமாகவே உள்ளது. அமைச்சுக்கள் அமைச்சா்கள் குறைப்பது பற்றி எதிா்காலத்தில் சிந்திக்க வேண்டும். அமைச்சுக்குகள் பலருக்கு பகிா்வதால் பறந்த அளவில் அதிகாரப் பரவலாக்கப்பட்டு மக்கள் உச்ச நன்மையைப் பெறுவாா்கள்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்