அவிஸ்ஸாவலைக்கு உடனடியாக முப்படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று CTJ கோரிக்கை..!அவிஸ்ஸாவெல - தத்துவ பகுதியில் பஸ் ஒன்றின் சிங்கள சாரதிக்கும் முஸ்லிம் ஆட்டோ ஓட்டுனர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பிரச்சினையாக மாறியுள்ளதினால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன் இந்தப் பிரச்சினையை காரணம் காட்டி தத்துவ – நாபல பகுதியில் தற்போது ஆர்பாட்டம் ஒன்றும் நடைபெற்று வருவதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தேர்தல் காலம் என்பதினால் முஸ்லிம் – சிங்கள இனமோதலை உண்டாக்கி வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக சிலர் முயற்சித்து இது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாத்தரை கிரிந்த பகுதியிலும் இது போன்றதொரு சம்பவம் நடைபெற்றிருந்தது குறிப்பிடத் தக்கதாகும்.

முஸ்லிம்களை தாக்கி அரசியல் செய்யும் இனவாத நிலையை அனைவரும் கைவிட வேண்டும் என்பதுடன், அவிஸ்ஸாவலை பகுதிக்கு உடனடியாக முப்படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் – CTJ அரசை வேண்டிக் கொள்கிறது.

R. அப்துர் ராசிக் B.Com
பொதுச் செயலாளர், 
சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்