முஸ்லிம் மக்களை மீள் குடியேற்றிய ரிஷாத் : எதிரான விசாரனை 27 இல்


சுற்றாடல் பாதுகாப்பு மையத்தினால் முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைக்கான திகதி எதிர்வரும் 27/01/2020 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (23/01/2020) இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளது.

வில்பத்து - கல்லாறு வனத்தில் ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பகுதியை துப்பரவு செய்து, இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களை அங்கு குடியமர்த்தும் நடவடிக்கையை இடைநிறுத்துவதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

இதற்கு முன்னர் இந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மஹிந்த சமயவர்தனவின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும், மனு மீதான தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னர் நீதிபதி வழக்கு விசாரணையிலிருந்து விலகிக்கொண்டார். இதன் காரணமாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஜனக்க டி சில்வா முன்னிலையில் மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுப்பது தொடர்பான தீர்மானம் எதிர்வரும் 27 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.
முஸ்லிம் மக்களை மீள் குடியேற்றிய ரிஷாத் : எதிரான விசாரனை 27 இல் முஸ்லிம் மக்களை மீள் குடியேற்றிய ரிஷாத் : எதிரான விசாரனை 27 இல் Reviewed by NEWS on January 24, 2020 Rating: 5