அரச ஊழியர்களின் சம்பளம் இன்று முதல் அதிகரிக்கப்படும்...!

எதிர்வரும் ஜனவரி மாதத்தில் அதிகரிக்கப்படும் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் முன்பு 

போன்றே அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய 2016 ஆம் ஆண்டின் மூன்றாவது சுற்று நிருபத்திற்கு அமைய அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் இன்று முதல் அதிகரிக்கப்படவுள்ளது.

இதன் மூலம் 2015 ஆம் ஆண்டை விட அரசு ஊழியர்களின் சம்பளம் 107 சதவீதம் அதிகரிக்கும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

2016 ஆம் ஆண்டின் மூன்றாவது சுற்று நிருபத்திற்கு அமைய ஐந்தாவது தடவையாக அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் பத்தாயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

2016 ஆம் ஆண்டின் ஜனவரி முதலாம் திகதி முதல் நான்கு முறை அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த சுற்று நிருபத்திற்கு அமைய அரச ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் இன்று முதல் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச ஊழியர்களின் சம்பளம் இன்று முதல் அதிகரிக்கப்படும்...! அரச ஊழியர்களின் சம்பளம் இன்று முதல் அதிகரிக்கப்படும்...! Reviewed by NEWS on January 01, 2020 Rating: 5