சேவை நலன் பாராட்டி கௌரவிப்பு ..!- பைஷல் இஸ்மாயில் -

அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையிலிருந்து இடமாற்றம் பெற்றுச் சென்றவர்களையும், இடமாற்றம் பெற்று வந்தவர்களையும், வேலை செய்கின்ற வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களை கௌரவிக்கும் நிகழ்வு குறித்த வைத்தியசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி எம்.பி.எம்.ரஜீஸ் தலைமையில் நேற்று (16) மாலை இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு அதிதிகளாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன், கல்முனை பிராந்திய ஆயுர்வேத வைத்தியசாலைகளின் இணைப்பார் வைத்திய கலாநிதி எம்.ஏ.நபீல், நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பர், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் கணக்காளர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

குறித்த வைத்தியசாலைக்காக பாடுபட்ட ஆரம்பகால வைத்தியர்கள், தற்போது சேவையாற்றும் வைத்தியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோருக்கும் புதிதாக இடமாற்றம் பெற்றுவந்த, பெற்றுச் சென்றவர்கள் ஆகியோர் இன்றைய நிகழ்வின் அதிதிகளினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும், கடந்த புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த வைத்தியர் எம்.ரீ.அமிராவின் புதல்வியும் இன்றைய நிகழ்வின்போது வைத்திய பொறுப்பதிகாரி எம்.பி.எம்.ரஜீஸினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.சேவை நலன் பாராட்டி கௌரவிப்பு ..! சேவை நலன் பாராட்டி கௌரவிப்பு ..! Reviewed by NEWS on January 17, 2020 Rating: 5