பயங்கரவாதி சஹ்ரானின் நெருங்கியா சகாக்கள் இருவர் டுபாயில் கைது ..!


(எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்திய பிரதான பயங்கரவாதியான ஸஹ்ரான் ஹாஷிமின் பிரதான சகாக்களாகக் கருதப்படும் இருவரை சிஐடியினர் ஐக்கிய அரபு அமீரகம் சென்று கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், சி.ஐ.டி. சிறப்புக் குழு அவர்களை இலங்கைக்கு அழைத்து வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
நாவலப்பிட்டி – ஹப்புகஸ்தலாவை பகுதியைச் சேர்ந்த 30 வயதான மொஹம்மட் சலீம் அப்துல் சலாம், ஹம்பாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த 37 வயதான மொஹம்மட் சஹான் மொஹம்மட் றியாஸ் ஆகியோரே கைது செய்யப்பட்டு துபாயிலிருந்து அழைத்து வரப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெறுவதாக நான்காம் மாடியின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...