மு.கா, அ.இ.ம.கா தலைவர்களின் பாராளுமன்ற பேச்சு...!


நேற்று மு.காவின் தலைவர் ஹக்கீம் " சஜித், கோத்தாபாய ஆகிய இருவரும் தங்களுக்கு வாக்களிக்காதவர்கள் பற்றி சிந்திக்க வேண்டும். " எனும் தலைப்பில் பாராளுமன்ற உரையை அமைத்திருந்தார். தனது பொதுப்படையான பேச்சினூடாக பல விடயங்கள் தொடர்பில் ஆட்சியாளர்களை சிந்திக்க தூண்டியிருந்தார். இதில் சமூக நலன் அடங்கியுள்ளதை மறுக்க முடியாது. ஆரோக்கியமான மனோ நிலையில் உள்ளவர்களுக்கு இப் பேச்சு இன்னும் நேரிய பாதையை காட்டியிருக்கும். இப் பேச்சினூடாக யாருக்கும் எவ்வித அழுத்தமும் ஏற்பட வாய்ப்பில்லை. எச் சமூகமோ அல்லது யாராவது தனி நபரோ கோபப்பட மாட்டார்கள்.

நேற்று அ.இ.ம.காவின் தலைவர் றிஷாத் " இலங்கையில் முஸ்லிம் அடிப்படைவாதம் இல்லை. அதனோடு முஸ்லிம்களை தொடர்பு படுத்த வேண்டாம். " எனும் கோணத்தில் பேச்சை அமைத்திருந்தார். முஸ்லிம்களுக்கு எதிராக பாராளுமன்றத்தில் பேசியிருந்த பா.உ சரத் பொன்சேகாவை நேரடியாக பெயர் கூறி கண்டித்ததோடு பதிலும் வழங்கியிருந்தார். அவரது பேச்சில் சிந்தித்தறிய ஏதுமல்ல. நேரடிப் பேச்சு என்பதால் எல்லோரும் விடயத்தை பெற்றிருப்பர். இது சிலருக்கு நேரடி அழுத்தமாக அமைந்திருக்கும். குறிப்பாக சரத் பொன் சேகாவிற்கும், ஐ.தே.கவுக்கும். இவர் அவ்வாறு பேசிய விடயம் முஸ்லிம்களிடையே ஐ.தே.கவின் செல்வாக்கை நேரடியாக சவாலுக்குட்படுத்தி இருக்கும். இதனால் பொன்சேகா இவர் மீது கோபப்படுவார். ஐ.தே.கவினர் கோபப்படலாம். இவரை வைத்துக்கொண்டு ஆட்சி செய்வது கடினமென சிந்திக்கலாம்.

எத் தலைவர் எமக்கு வேண்டும். தீர்மானிப்போம்..
மு.கா, அ.இ.ம.கா தலைவர்களின் பாராளுமன்ற பேச்சு...! மு.கா, அ.இ.ம.கா தலைவர்களின் பாராளுமன்ற பேச்சு...! Reviewed by NEWS on January 09, 2020 Rating: 5