பிரதான செய்திகள்

விரைவில் கட்சித் தலைமை பிரச்சினைக்குத் தீர்வு ..!ஐக்­கிய தேசியக் கட்சி பிள­வ­டைந்து தேர்­தலில் போட்­டி­யி­டு­மானால் அதனால் ஒரு­போதும் வெற்­றி­ய­டைய முடி­யாது. எனவே கட்சித் தலைமை தொடர்­பான குழப்­ப­நி­லைக்கு சிரேஷ்ட தலை­வர்கள் ஒன்­றி­ணைந்து தீர்­வொன்றைக் காண­வேண் டும். அந்­த­வ­கையில் தற்­போது கரு ஜய­சூ­ரிய இவ்­வி­வ­கா­ரத்தில் தலை­யீடு செய்­தி­ருப்­பதால் விரைவில் இப்­பி­ரச்­சி­னைக்கு முடிவு கிட்டும் என்று நம்­பு­வ­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜுபுர் ரஹுமான் தெரி­வித்தார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று திங்­கட்­கி­ழமை ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின்போது கட்சித் தலை­மையில் தொடரும் குழப்­ப­நிலை குறித்துக் கேள்வி எழுப்­பப்­பட்­டது. அதற்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார். இது­கு­றித்து அவர் மேலும் கூறி­ய­தா­வது,

கட்சி உறுப்­பி­னர்கள் வெவ்­வேறு நிலைப்­பா­டு­களைக் கொண்­டி­ருப்­ப­துடன், அதன் விளை­வாக கட்­சிக்குள் சில முரண்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன என்­பது உண்­மையே. ஆனால் தற்­போது கட்­சியின் தலைமை குறித்த பிரச்­சி­னைக்குத் தீர்­வு­காணும் விவ­கா­ரத்தில் ஐ.தே.கவின் சிரேஷ்ட உறுப்­பி­னரும், சபா­நா­ய­க­ரு­மான கரு ஜய­சூ­ரிய தலை­யீடு செய்­தி­ருக்­கிறார். எனவே இந்த விவ­காரம் இன்னும் இரு தினங்­க­ளுக்குள் முடி­வுக்குக் கொண்­டு­ வ­ரப்­படும் என்று நம்­பு­கின்றோம்.
ஆனால் கட்­சியின் உறுப்­பினர் என்ற வகையில் ஐக்­கிய தேசியக் கட்சி பிள­வ­டைந்து தேர்­தலில் போட்­டி­யி­டு­மானால் அக்கட்சியினால் ஒரு­போதும் வெற்­றி­ய­டைய முடி­யாது என்­பதே எனது நிலைப்­பா­டாகும். எனவே கட்­சிக்குள் காணப்­படும் முரண்­பா­டு­களை விரை­வாகத் தீர்த்­துக்­கொண்டு ஒன்­றி­ணைந்து முன்­நோக்கிப் பய­ணிக்­க­வேண்டும்.
ஒன்­றி­ணைந்து பய­ணிப்­ப­தெனின் இரு­த­ரப்­புமே விட்­டுக்­கொ­டுப்­ப­துடன், சில அர்ப்­ப­ணிப்­புக்­க­ளையும் செய்­ய­வேண்டும். அதே­போன்று இவ்­வி­வ­கா­ரத்தில் கட்­சி யின் சிரேஷ்ட தலை­வர்கள் இடையிட்டு தீர்­வொன்றைக் காண்பதற்குரிய நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில் தற்போது கரு ஜயசூரிய தலை யீடு செய்திருப்பதன் மூலம் விரைவில் கட்சித்தலைமை குறித்த குழப்பநிலைக்கு தீர்வு எட்டப்படும் என்றும் நம்புகின்றோம் என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
News
News

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget