அ.இ.ம.கா தலைவர் றிஷாத் இனவாதம் பேசுகிறாரா..?அ.இ.ம.கா தலைவர் றிஷாத் இனவாதம் பேசுவதாக சிலர் கூறுகின்றனர். இனவாதம் என்றால் என்ன, உரிமை என்றால் என்ன என்ற தெளிவு முதலில் அவசியமானது. 

30 வருடங்களுக்கு பிறகு முஸ்லிமொருவர் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டிருந்தார். இவ் 30 வருட கால எல்லையில், முஸ்லிம்களில் ஒருவராவாது அரசாங்க அதிபராவதற்கான தகுதியுடையவராக இருக்கவில்லையா? பலர் இருந்தார்கள். முஸ்லிம் என்பதால் புறக்கணிக்கப்பட்டார்கள். இது இனவாதத்தின் விளைவால் நடந்தேறிய உரிமை பறிப்பு.

இந்த உரிமை பறிப்பை வெற்றிகொள்வதில் அ.இ.ம.காவின் தலைவர் றிஷாத் பெரு முயற்சி எடுத்திருந்தார். வெற்றியும் பெற்றார். இவர் தவிர்ந்து, இது தொடர்பில் முஸ்லிம் பா.உறுப்பினர்கள் பலர் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்துமுள்ளனர். இப்போது எதிர்க்கட்சியில் இருந்தல்ல. ஆளும் கட்சியில் இருந்த போதே!

அவ்வாறு நியமிக்கப்பட்டவரை வெறும் 1.5 வருட காலத்துக்குள் நீக்கியதேன்? அவ்வாறு நீக்குவதாக இருந்தால் உரிய காரணத்தை முன் வைக்க வேண்டுமல்லவா? இதனை கேட்பது இனவாதமா?

இது இனவாதமல்ல.. உரிமையை கேட்டல்...

அ.இ.ம.காவின் தலைவர் றிஷாத் அரசாங்க அதிபர் வேண்டுமென்ற கோசத்தை, இன்று, தான் எதிர்க்கட்சியில் உள்ள போது மாத்திரம் முன் வைக்கவில்லை, தான் ஆளும் கட்சி அமைச்சராக இருந்த போதும் முன் வைத்திருந்தார். இன்று அவர் இவ் விடயத்துக்காக குரல் கொடுக்கும் போது, இனவாதத்தை விதைத்து பதவியை பெற முயல்கிறார் என்போர், அன்று அவரின் நோக்கம் என்னவென கூறுவார்களா?

மஹிந்த அணியினர் எது செய்தாலும் வாய் மூடியிருக்க வேண்டும். கேட்டால் " நீங்கள் வாக்களித்தீர்களா " என கேட்பார்கள். ஏதும் பேசினால் சிங்கள மக்கள் கோபித்துக்கொள்வார்கள், அவர்களோடு ஒத்து போக வேண்டுமென்பார்கள். இந் நிலை தொடர்ந்தால், இவ்வாறானவர்கள் பௌத்த மதத்தை ஏற்பதையே இறுதி தீர்வாக பெறுவர். இனியாவது சிந்தியுங்கள். இது இனவாதத்தின் கோர தாண்டவம். ஒரு நாள் உங்களையும் நசுக்கிவிடும்.

உதவி செய்யாவிட்டாலும் பறவாயில்லை, உபத்திரம் செய்ய வேண்டாம்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.
அ.இ.ம.கா தலைவர் றிஷாத் இனவாதம் பேசுகிறாரா..? அ.இ.ம.கா தலைவர் றிஷாத் இனவாதம் பேசுகிறாரா..? Reviewed by NEWS on January 24, 2020 Rating: 5