இனி 4 மணித்தியாலங்களுக்குள் தேசிய அடையாள அட்டை
ஒரு நாள் சேவையூடாக தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 4 மணித்தியாலங்களுக்குள் தேசிய அடையாள அட்டையை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

தேசிய அடையாள அட்டை தயாரானவுடன் அது குறித்து விண்ணப்பதாரிக்கு குறுந்தகவல் அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க குறிப்பிட்டார்.

இதனூடாக தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த பின்னர் ஆட்பதிவு திணைக்கள வளாகத்தில் காத்திருக்க வேண்டிய தேவை கிடையாது எனவும் அவர் தெரிவித்தார்.

ஒரு நாள் சேவையூடாக தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கு நாளாந்தம் 1500-க்கும் அதிகமானோர் ஆட்பதிவு திணைக்களத்திற்கு வருகை தருவதாகவும் ஆணையாளர் நாயகம் கூறினார்.

இவர்களுக்கு வினைத்திறன் மிக்க சேவையை வழங்கும் நோக்குடன் இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க சுட்டிக்காட்டினார்.
இனி 4 மணித்தியாலங்களுக்குள் தேசிய அடையாள அட்டை இனி 4 மணித்தியாலங்களுக்குள் தேசிய அடையாள அட்டை Reviewed by ADMIN on February 22, 2020 Rating: 5