பிரதான செய்திகள்

உடும்புகளை கொன்ற 6 பேர் கைது.


நாவுல, புப்பிலிய, பம்பர­கஹவத்த பாதுகாப்பு வனப்பகுதிக்குள் சட்டவி­ரோதமாக நுழைந்து உடும்புகளை கொன்று

அவற்றை தீயினால் வாட்டிக் கொண்டிருந்த அறுவர் வனஜீவராசிகள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்க­ளிடமிருந்து கொல்லப்பட்ட எட்டு உடும்புகளை மீட்ட­தாக அதிகாரிகள் தெரி­வித்துள்ளனர்.

அரச வனப்பகுதியில் புகை வெளியேறுவதை அவதானித்த ஏலஹெர வன­ஜீவராசிகள் அலுவலக அதி­காரிகள் சிலர் அது தொடர்பில் சோதனையிட்ட­போது, உடும்புகளை தீயினால் சுட்டுக் கொண்­டிருந்த சந்தேக நபர்களை கண்டுபிடித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள், புப்பிலிய, மாலகமுவ, கவேவெல மற்றும் மனன்­வத்த ஆகிய பிரதேசங்­களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இவர்கள் உடும்பு இறைச்­சியை சுற்றுலா ஹோட்­டல்களுக்கும், சில வர்த்தகர்­களின் வீடுகளுக்கும், பல்­வேறு வைபவங்களுக்கும் விநியோகிப்பதாக மேல­திக விசாரiணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக­நபர்கள் நாவுல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று நாவுல நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget