வில்பத்து காடழிப்பு விவகாரம் இன்று நடந்தது என்ன?

ADMIN
0 minute read
0


பாதுகாக்கப்பட்ட வில்பத்து வனத்தை அழித்து சட்ட விரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவதற்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முதலில் நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான ஜனத் த சில்வா மற்றும் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன ஆகியோர் முன்னிலையில் இன்று (19) குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதனடிப்படையில் குறித்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் நீதி மையத்தால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பாதுகாக்கப்பட்ட வில்பத்து வனத்தை அழித்து சட்ட விரோத கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதால் சூழலுக்கு பாரியளவு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது முற்றாக சட்டத்திற்கு மாறானது என்றும் தற்போது நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்களை அகற்ற உத்தரவிடுமாறும் மனுதாரர்கள் நீதிமன்றத்திடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Post a Comment

0 Comments

Post a Comment (0)