தம்பலகாம பிரதேச செயலாளர் பிரிவில் இளைஞர் நாடாளுமன்ற தேர்தலில் ஹஸ்ருள்ளா முஹம்மட் சாஜித் வெற்றி


_ஹஸ்பர் ஏ ஹலீம்_

தேசிய ரீதியாக இடம் பெற்ற இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் இளைஞர் யுவதிகள் போட்டியிட்டதனை தொடர்ந்து தேர்தல் முடிவுகளும் இன்றைய தினமே வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச செயலகப் பிரிவிலும் குறித்த தேர்தல் இடம் பெற்றன.

தம்பலகாம பிரதேச செயலாளர் பிரிவில் மீரா நகரில் உள்ள அரபா அல் ஹிக்மா விளையாட்டுக் கழகம் சார்பில் போட்டியிட்ட ஹஸ்ருள்ளா முஹம்மட் சாஜித் எனும் இளைஞன் 10 மேலதிக வாக்குகளால் வெற்றியீட்டி தம்பலகாம பிரதேசம் சார்பாக இளைஞர் நாடாளுமன்ற பிரதிநிதியை தன்வசப்படுத்தியுள்ளார்.

270 வாக்குகளை பெற்றுள்ள இவர் தனது வெற்றிக்காக உழைத்த பிரதேச விளையாட்டு கழக உறுப்பினர்கள் மற்றும் ஏனையோருக்கும் நன்றிகளை தெரிவித்ததுடன் எதிர் காலத்தில் இன மத பேதமற்ற சேவைகளை இளைஞர்களிடத்தில் கொண்டு சேர்ப்பதற்கான தன்னாலான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் வெற்றிக்களிப்பு நிகழ்வின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

தம்பலகாம பகுதியில் மொத்தமாக ஒன்லைன் மூலமாக பதிவு செய்யப்பட்ட 1664 வாக்குகளில் 689 வாக்குகளே அளிக்கப்பட்டுள்ளன இதில் 05 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளார்கள் 18_29 வயதான இளைஞர் யுவதிகள் குறித்த பிரதேச செயலகப் பிரிவில் வசிப்பவராயின் அவர்களுக்கு வாக்களிப்பில் கலந்து கொள்ள முடியும் எனவும் முன்னர் ஒன்லைன் மூலமான பதிவுகளை மேற்கொண்டிருக்க வேண்டும் என இளைஞர் நாடாளுமன்ற வாக்களிப்பு தகைமைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது 04 ஆவது தேர்தல் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தம்பலகாம பிரதேச செயலாளர் பிரிவில் இளைஞர் நாடாளுமன்ற தேர்தலில் ஹஸ்ருள்ளா முஹம்மட் சாஜித் வெற்றி தம்பலகாம பிரதேச செயலாளர் பிரிவில் இளைஞர் நாடாளுமன்ற தேர்தலில் ஹஸ்ருள்ளா முஹம்மட் சாஜித் வெற்றி Reviewed by ADMIN on February 23, 2020 Rating: 5