ஹரிஸ் அவமானப்படுத்தப்பட்டாரா? கல்முனையில் நடந்தது என்ன?


கல்முனை விவகாரம் தொடர்பில் விடுதலை புலிகளின் முன்னாள் பிரதி தளபதி கருணாவினாலும் மேலும் பலராலும் கொடுக்கப்பட்ட அழுத்தத்திற்கமைய பிரதமர் மகிந்தவால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்திற்கு எனக்கு அழைப்பு விடுக்கவில்லையென முன்னாள் பிரதியமைச்சர் எச்.எம்.எம் ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கல்முனை விவகாரம் தொடர்பில் கடந்த வியாழக்கிழமை பிரதமரால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் எனக்கு கசப்பான ஒரு சம்பவம் இடம்பெற்றது.

குறித்த கூட்டத்திற்கு எனக்கு அழைப்பு விடுக்கவில்லையென தெரிவித்து பிரதமரின் செயலாளர் ஊடாக என்னை வெளியில் அனுப்புமாறு விமலவீர திசாநாயக்க, சிறியானி போன்றோர் கூறியுள்ளனர். அவரும் என்னை செல்லுமாறு குறிப்பிட்டார்.

பின்பு பிரதமர் கூட்டத்தில் என்னை காணவில்லையென தெரிவித்து என்னை அழைத்து வருமாறு கூறினார்.

இதனை தொடர்ந்து கூட்டத்திற்கு வந்த அனைவரும் ஒத்தக்குரலில் தமிழ் மக்கள் பெருமளவில் வாழும் பகுதியில் பிரதேச செயலகத்தை பிரித்து கொடுக்க வேண்டுமென கூறினார்கள்.

இதன்போது அரசியல்வாதிகளே இனவாதத்தை தூண்டுவதாக பிரதமர் நியாயமாக அடித்து கூறினார்.

இதன்போது முன்னாள் அமைச்சர் அதாவுல்லா கூட்டத்திற்கு வந்து இவ்வாறு அனைத்துமே இன,மத வேறுபாட்டில் காணப்பட்டால் எவ்வாறு நாட்டில் இன ஒற்றுமையை நிலை நாட்ட முடியுமென கேள்வியெழுப்பினார் என்றும் தெரிவித்துள்ளார்.
ஹரிஸ் அவமானப்படுத்தப்பட்டாரா? கல்முனையில் நடந்தது என்ன? ஹரிஸ் அவமானப்படுத்தப்பட்டாரா? கல்முனையில் நடந்தது என்ன? Reviewed by ADMIN on February 21, 2020 Rating: 5