ஹிஸ்புல்லாஹ் ஹிருணிக்காவுக்கு கண்டணம்.ஐக்கிய தேசிய கட்சியின் பா.உ ஹிருணிக்காவின் கருத்துக்கு இனவாதத்தை தூண்டும் வகையிலும் தீவிரவாதத்தை காட்டி கொடுத்து நாட்டை காப்பாற்றிய சாய்ந்தம்ருது மக்களை கலங்கப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் இவர்களினாலே நாம் பல இன்னல்களையும், அழிவுகளையும் சந்திதோம் தற்போது சிங்கள மக்கள் மத்தியில் மீண்டும் முஸ்லிம் சமூகத்தை இனவாதிகளாக சித்தரிக்கவும் எமது சமூகத்தை படு குழியை நோக்கி தள்ளுவதாகவும் இதனை ஐக்கிய தேசிய கட்சி முஸ்லிம் அமைச்சர்கள் ஹிருணிக்காவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து செயல்படுவதும் மிகவும் வேதனைக்குரியது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஹிருணிக்காவின் கருத்து ஐக்கிய தேசிய கட்சியின் கருத்து அல்ல என ஐக்கிய தேசிய கட்சியின் கலகெதர அமைப்பாளரும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான முன்னால் அமைச்சர் ரவுப் ஹக்கிம் தெரிவித்தமை குறிப்பிடதக்கது.
ஹிஸ்புல்லாஹ் ஹிருணிக்காவுக்கு கண்டணம். ஹிஸ்புல்லாஹ் ஹிருணிக்காவுக்கு கண்டணம். Reviewed by ADMIN on February 18, 2020 Rating: 5