சஹ்ரான் விவகாரம் அரசாங்கம் விசாரணை செய்யும் என்ற நம்பிக்கை இல்லை - ரங்கே பண்டார


நாட்டுமக்கள் அனைவ­ருமே உயிர்த்த ஞாயிறு தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட

நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கைகளை மேற்­கொள்ள வேண்டும் என்றே எதிர்பார்த்திருந்தனர். இதன் காரணமாகவே ஜனா­திபதி தேர்தலின் போது மக்கள் கோத்தாபயவை வெற்றியடையச் செய்தி­ருந்தனர்.

தாம் ஆட்சிக்கு வந்த உடனே தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஆணைக்குழு­வொன்றை அவர் நியமித்­திருந்தாலும், அந்தக் குழுவினால் மேற்கொள்­ளப்படும் விசாரணைகள் தொடர்பில் மக்கள் தற்போது நம்பிக்கையிழந்­துள்ளனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாரா­ளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

அத்­துடன் உயிர்த்த ஞாயிறு­தின தாக்குதல்களுக்கு பொறுப்புக் கூறவேண்­டிய பிரதான நபரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசே­னவை ஸ்ரீலங்கா பொது­ஜன சுதந்திர முன்னணி தவிசாளராக நியமித்துள்­ளமையானது நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை சிதைத்துள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவிய­லாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளி­யிட்டபோதே அவர் இவ்­வாறு கூறினார். அங்கு அவர் மேலும் கூறியதா­வது,

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் தொடர்பில் பொறுப்புக் கூறவேண்­டிய பிரதான நபரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசே­னவை ஸ்ரீலங்கா பொது­ஜன சுதந்திர முன்ன­ணியின் தவிசாளராக நிய­மித்துள்ளமையை ஏற்றுக் கொள்ள முடியாது. 

இந்த தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்­னெடுப்பதற்காக ஜனாதி­பதி கோத்தாபய ராஜபக் ஷ ஆணைக்குழுவொன்றை நியமித்த போது நான் அதற்கு நன்றி தெரிவித்தி­ருந்தேன். ஆனால் அதனை தற்போது மீளப் பெற்றுக் கொள்ள விரும்புகிறேன்.

இவர்களது கூட்டணியின் தவிசாளராக மைத்தி­ரியை அறிவித்ததை அடுத்து இந்த விவகாரம் தொடர்பில் இருந்த குறைந்தபட்ச நம்பிக்­கையும் இல்லாமல் போயுள்ளது.

பொதுவா­கவே ஏதாவது ஒரு விவ­காரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஆணைக்கு­ழுக்கள் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை­களை மேற்கொண்டுள்ள­தற்கு சாட்சிகள் இல்லை.

அதேபோல் தான் இந்த உயிர்த்த ஞாயிறு தாக்­குதால் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்­குழுவும், முழுமை­யான விசாரணைகளை முன்னெடுக்குமா என்­பது தொடர்பில் உறுதி­யில்லை.

இதேவேளை, மிக் 27 போர் விமானங்கள் நான்கை கொள்வனவு செய்யும் போதும் அதே ரக விமா­னங்கள் நான்கை மீளத் திருத்தும் போதும் இடம்­பெற்ற பணமோசடிகள் குறித்த விவகாரத்தின் பிரதான சந்தேக நபரான ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்­கவை அரசாங்கம் பிணையில் விடுவிப்பதற்­கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தோன்றுகின்றது.

இந்த விவகாரம் தொடர்பில் இதுவரையில் விசார­ணைகளை முன்னெ­டுத்து வந்த பொலிஸ் பரி­சோதகர் நிஹால் பிரான்­சிஸையும் , அவரது குழுவினரையும் விசாரணை பொறுப்புகளிலிருந்து மாற்றியுள்ளதுடன், இந்த வழக்கு விசாரணை தொடர்பில் மன்றில் முன்னிலையாகி வந்த அரச சட்டத்தரணியையும் மாற்றியுள்ளனர்.

குற்றவாளியை காப்பாற்றுவதற்கான அவசியம் பொலிஸாருக்கு இல்லை. அப்படியென்றால் அரசாங்கமே அவரை காப்பாற்ற முயற்சிக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.-

Vidivelli
சஹ்ரான் விவகாரம் அரசாங்கம் விசாரணை செய்யும் என்ற நம்பிக்கை இல்லை - ரங்கே பண்டார சஹ்ரான் விவகாரம் அரசாங்கம்  விசாரணை செய்யும் என்ற நம்பிக்கை இல்லை - ரங்கே பண்டார  Reviewed by ADMIN on February 19, 2020 Rating: 5