Headlines
Loading...
கொரோனா வைரஸ் தாக்கம் வெளியானது அதிர்ச்சி தகவல்.

கொரோனா வைரஸ் தாக்கம் வெளியானது அதிர்ச்சி தகவல்.


சீனாவில் கொரோனா வைரஸ் எனும் கொவிட்-19 வைரஸினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,442 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று சனிக்கிழமை கொவிட்-19 வைரஸினால் 97 பேர் உயிரிழந்துள்ளனர் இதனால் சீன பெருநிலப்பரப்பில் கொவிட்-19 வைரஸினால்; உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,442 ஆக அதிகரித்துள்ளது என சீனாவின் சுகாதார ஆணைக்குழு இன்று தெரிவித்துள்ளது.

நேற்று உயிரிழந்த 97 பேரில் மரணங்களில் 96 பேர் ஹுபேய் மாகாணத்தில் உயிரிழந்துள்ளனர்.




அத்துடன் சீனாவில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 648 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.




இதனால், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியதாக உறுதிப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 76,936 ஆக அதிகரித்துள்ளது எனவும் அறிவிக்கப்பட்டள்ளது.




இதேவேளை 22,888 பேர் குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர் எனவும் சீன தேசிய சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.




உலகளாவிய ரீதியில் கொவிட் -19 வைரஸினால் உயிரிந்தோர் எண்ணிக்கை 2,460 ஆக உள்ளது.

0 Comments: