பிரதான செய்திகள்

யாழ்ப்பாணம் உட்பட 5 மாவட்டங்களுக்கு ஊரடங்கு நீடிப்பு!


மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.


இது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
குறித்த மாவட்டங்களில் 6 மணிக்கு நீக்கப்படும் ஊரடங்கு சட்டம் மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு அமுல்படுத்தப்படும்.
இம் மாட்டங்களிலுள்ள மக்களுக்கு வேறு மாவட்டங்களுக்குச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் *சுவிஸர்லாந்திலிருந்து நாட்டுக்கு வந்த கொரோனா தொற்றுக்குள்ளான மதபோதகர்* ஒருவர் மத பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த நபரும் அவருடன் குறித்த தினங்களில் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்த நபர்களும் இணங்காணப்படும் வரை இந்த தடை நடைமுறையிலிருக்கும்.
இந்த 5 மாவட்டங்களிலிருக்கும் மக்களை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு வடக்கு மக்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று அரசாங்கம் கேட்டுக் கொள்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget