ஒரே நாளில் 738; சீனாவின் மரண எண்ணிக்கையைத் தாண்டிய ஸ்பெயின்

ADMIN
0 minute read
0



கடந்த 24 மணி நேரத்தில் 738 பேர் கொரோனாவால் மரணித்துள்ள நிலையில் சீனாவின் எண்ணிக்கையைத் தாண்டி, இத்தாலிக்கு அடுத்த படியாக கொரோனாவால் அதிக மரணங்கள் நிகழ்ந்த இரண்டாவது நாடாகியுள்ளது ஸ்பெயின்.






சீனா வெளியிட்டிருந்த உத்தியோகபூர்வ எண்ணிக்கை 3285 ஆகும். இந்நிலையில் ஸ்பெயினில் தற்போது 3434 பேரும் இத்தாலியில் இதுவரை வெளியிடப்பட்ட தகவல் அடிப்படையில் 6820 பேரும் உயிரிழந்துள்ளனர்.


இன்றைய தினம் ஸ்பெயினின் பிரதிப் பிரதமருக்கும் கொரோனா தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
To Top