ஆசையாய் ஓடி வரும் மகன்.. அணைக்க முடியாமல் தவிக்கும் மருத்துவர் - மனதை உடைக்கும் வீடியோ


கொரோனா என்கிற ஒற்றைச்சொல் உலகை அச்சுறுத்தும் வார்த்தையாக மாற்றியுள்ளது. சீனா, இத்தாலி, ஈரான், பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மன் உள்ளிட்ட பல நாடுகளில் பல ஆயிரம் பேர் இந்த வைரஸால் இறந்து விட்டனர். இந்தியாவிலும் 750 பேருக்கும் மேல் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, உலகெங்கும் உள்ள மருத்துவர்கள் இரவு பகல் பாராமல் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர். இதில், அவர்கள் சொந்த வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தங்களின் குழந்தைகளுடன் கூட நேரம் செலவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒரு வீடியோ வெளியாகி மனதை கலங்க செய்துள்ளது. மருத்துவமனையில் சில நாட்கள் தங்கி சிகிச்சை அளித்து விட்டு வீட்டிற்கு வரும் தந்தையை கண்டதும் அவரின் மகன் ஆசையாய் ஓடி வருகிறான். ஆனால், கை கழுவுதல், குளித்தல் போனற பாதுகாப்பு நடவடிக்கைக்கு பின்னரே மற்றவர்கள் அருகில் செல்ல வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் மருத்துவர் அவனை அப்படியே தடுத்து நிறுத்துகிறார். அதன்பின் மகனை கூட கட்டி அணைக்க முடியவில்லையே என அவர் உடைந்து அமரும் காட்சி அதில் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோ மனதை கலங்கடிக்க செய்துள்ளது.
ஆசையாய் ஓடி வரும் மகன்.. அணைக்க முடியாமல் தவிக்கும் மருத்துவர் - மனதை உடைக்கும் வீடியோ ஆசையாய் ஓடி வரும் மகன்.. அணைக்க முடியாமல் தவிக்கும் மருத்துவர் - மனதை உடைக்கும் வீடியோ Reviewed by ADMIN on March 28, 2020 Rating: 5