இலங்கையில் கொரோனா சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்ட பெண் - நலமாக குழந்தை பெற்றார்


கொழும்பில் கொரோனா வைரஸ் என சந்தேகிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது.

காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் குழந்தை பெற்ற நிலையில், தாயும் குழந்தையும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பெண்ணின் கணவர் இத்தாலியில் இருந்து வருகைத்தந்துள்ளார். இந்நிலையில் இந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்றிற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளது. உடனடியாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கர்ப்பிணியான குறித்த பெண் நேற்றைய தினம் தனது குழந்தையை பெற்றெடுத்துள்ளார். வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் தங்கள் ஆபத்தை குறித்து சிந்திக்காமல் அவர்களின் கடமைகளை நிறைவேற்றியுள்ளனர்.


எனினும் குறித்த பெண்ணின் இரத்த மாதிரி கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனை அறிக்கைக்கமைய அவருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என வைத்தியசாலை இயக்குனர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் கொரோனா சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்ட பெண் - நலமாக குழந்தை பெற்றார்   இலங்கையில் கொரோனா சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்ட பெண் - நலமாக குழந்தை பெற்றார் Reviewed by ADMIN on March 21, 2020 Rating: 5