தபால் மூல வாக்குப்பதிவுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் பொறுப்பேற்பு


பாராளுமன்ற தேர்தலுடன் தொடர்புடைய தபால் மூல வாக்குப்பதிவுக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று (06) ஆரம்பமாகிறது.

இன்று முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை தபால் வாக்காளர்களுக்கான விண்ணப்பங்கள் பொறுப்பேற்கப்படுவதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இம்முறை பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், தபால் மூல வாக்குப்பதிவு இடம்பெறும் தினம் இதுவரையில் தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்படவில்லை.

பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் எதிர்வரும் 12 ஆம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.
தபால் மூல வாக்குப்பதிவுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் பொறுப்பேற்பு தபால் மூல வாக்குப்பதிவுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் பொறுப்பேற்பு Reviewed by ADMIN on March 06, 2020 Rating: 5