துபாயிலிருந்து நாடு திரும்பிய இளைஞருக்கு கொரோனா. சீல் வைக்கப்பட்டது அட்டுலுகம கிராமம்.


களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டுலுகம கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் அண்மையில்

துபாயிலிருந்து நாடு திரும்பியுள்ளார். குறித்த நபரை வீட்டில் தனிமையில் 14 நாட்கள் இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்த போதும் குறித்த நபர் தொடர்ந்தும் அசிரத்தையாகவே இருந்து வந்துள்ளார் மேலும் ஊரிலுள்ள பலரோடும் பொதுவாக பழகியும் இருக்கின்றார்.

நேற்று குறித்த இளைஞர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த பிரதேசத்தில் பதற்றம் நிலவி வருகின்றது. அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த ஏராளமானோருக்கு இத்தொற்று ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

இதன் காரணமாக குறித்த பிரதேசத்தில் இருந்து யாரும் வெளியேறக் கூடாது எனவும் குறித்த பிரதேசத்திற்குள் யாரும் நுழைய கூடாது எனவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபருடன் நேரடியாக தொடர்புகளை கொண்டிருந்தவர்களை பாதுகாப்பு படை அடையாளப்படுத்தி வருகின்றனர். மேலும் அட்டுலுகம பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறியக் கிடைக்கிறது.

நன்றி
ரூமி ஹரீஸ்
துபாயிலிருந்து நாடு திரும்பிய இளைஞருக்கு கொரோனா. சீல் வைக்கப்பட்டது அட்டுலுகம கிராமம்.  துபாயிலிருந்து நாடு திரும்பிய இளைஞருக்கு கொரோனா. சீல் வைக்கப்பட்டது அட்டுலுகம கிராமம். Reviewed by ADMIN on March 28, 2020 Rating: 5