உம்ரா கடமைகளுக்கு தற்கால தடை ; சவுதி அரசு அதிரடி தீர்மானம்

ADMIN
0 minute read
0

உலகில் வேகமாக  பரவி வரும் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாட்டவர்களுக்கு புனித மக்காஹ் மற்றும் மதீனாவிற்குள் செல்ல ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இனிமேல் உள்நாட்டவர்கள் உட்பட அனைவருக்கும் உம்றாஹ் தடை செய்ய்பட்டுள்ளது.

இதேவேளை மறு அறிவித்தல் வரை புனித மக்காவிற்குள் செல்லும் பாதை மற்றும் புனித மதினா நகர் பள்ளிவாசலுக்குள் செல்லும் பாதைகளும் மூடப்படுவதாக சவூதி அரேபியா சற்றுமுன் அறிவித்துள்ளது.

சவூதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் ஒரு மாத காலம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

Post a Comment (0)