அரண்மனை ஊழியர்களுக்கு கொரோனா - தனிமைப்படுத்தப்பட்ட மலேசிய மன்னர்.அரண்மனை ஊழியர்கள் ஏழு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், மலேசியா மன்னர் மற்றும் ராணி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


கொரோனா வைரஸால் உலகில் பலியானோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஏழை நாடுகள், வளர்ந்து வரும் நாடுகள், பணக்கார நாடுகள் என வேறுபாடின்றி அனைத்து நாடுகளையும் கொரோனா புரட்டி போட்டு வருகிறது.

அந்த வரிசையில் மலேசியாவும் உள்ளது. தற்போது அந்நாட்டில் 2,031 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 23 பேர் உயிரிழந்துள்ளனர்.


இந்நிலையில் அங்கிருக்கும் அரண்மனை ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி ச&#30#3014;ய்யப்பட்டுள்ளது.


இதுகுறித்து மலேசிய அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் , அரண்மனையைச் சேர்ந்த ஊழியர்கள் 7 பேர் கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எவ்வாறு இது ஏற்பட்டது என மருத்துவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.


இதனையடுத்து மலேசிய மன்னர் கிங் சுல்தான் அப்துல்லா மற்றும் மலேசிய ராணி துன்கு அஜிசா அமினா மைமுனாவுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


இதில், அவர்கள் இருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அவர்கள் தொடர்ந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
அரண்மனை ஊழியர்களுக்கு கொரோனா - தனிமைப்படுத்தப்பட்ட மலேசிய மன்னர்.   அரண்மனை ஊழியர்களுக்கு கொரோனா - தனிமைப்படுத்தப்பட்ட மலேசிய மன்னர். Reviewed by ADMIN on March 26, 2020 Rating: 5