பிரதான செய்திகள்

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் இந்தியாவில் பலி!



இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டெல்லியின் ஜனக்புரி பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.

அண்மையில் ஜப்பான், ஜெனிவா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு சென்றிந்த அவரது மகனிடமிருந்து அவருக்கு கொரோனா பரவியுள்ளதாக நம்பப்படுகின்றது.

இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலயைில் உயிரிழந்த இரண்டாவது நபர் இவர் ஆவார்.




இதற்கு முன்னர் கர்நாடகாவில் 76 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.




இந்தியாவில் தற்போது 81 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அவர்களில் 17 பேர் வெளிநாட்டவர்கள் என்பதுடன் ஏனையவர்கள் இந்தியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget