மன்னார் மக்களை புத்தளத்திலிருந்து தேர்தலுக்கு அழைத்து சென்ற விவகாரம் ரிஷாட் பதியுதீனை CID யில் முன்னிலையாக அழைப்பு.

ADMIN
0 minute read
0


முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 2 மணிக்கு குறித்த திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் வசிப்பவர்களை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் அரச நிதியில் மன்னாரிற்கு கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிக்க அழைத்து சென்றமை தொடர்பில் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ளவே அழைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

Post a Comment (0)