51 வயது தந்தையை கொலை செய்த 19 வயது மகன்! அதிகாலை இடம்பெற்ற பதறவைக்கும் சம்பவம்

ADMIN
0 minute read
0

மதுபோதையில் வீட்டுக்கு வந்து தாயாருடன் சண்டையிடும் தந்தையை 19 வயதுடைய மகன் வெட்டி கொலை செய்துள்ளார் .

இந்த சம்பவம் இன்று அதிகாலை அனுராதபுரம் கல்னேவ பொலிஸ் பிரிவு, கறுவலகஸ்வெல சேனபுர பகுதியில் நடைபெற்றது.

சம்பவத்தில் 51 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

மேற்படி நபர், அவரது மனைவியுடன் அடிக்கடி சண்டையிடுவார் என்றும், வழமைபோன்று நேற்றிரவும் மதுபோதையில் வந்த நபர், மனைவியுடன் சண்டையிட்டதாகவும் இதனால் ஆத்திரமடைந்த மகன் தந்தையை, கொலை செய்துள்ளதாகவும் தெரியவருகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞனை கைதுசெய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
To Top