வவுனியாவில் 15 ஆயிரம் கிலோ ‘பெசன் புறுட்’ கொள்வனவு.

ADMIN
1 minute read
0

வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் பெசன்புரூட் பழ அறுவடை மற்றும் கொள்வனவு நிகழ்வு அரசாங்க அதிபர் சமன் பந்துலசேனா தலைமையில் இன்று (16) இடம்பெற்றது.

வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையுடன் வவுனியா வடக்கு அனந்தர் புளியங்குளம் பகுதியில் பெசன்புரூட் பழ செய்கை பாரியளவில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

எனினும் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதனல் பழச்செய்கையாளர்கள் தமது உற்பத்தியை விற்பனை செய்ய முடியாத நிலையில் காணப்பட்டனர்.

இதனை கருத்தில் கொண்டு கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் பழச்செய்கையாளர்களின் நலன்கருத்தி தென்பகுதியில் உள்ள நிறுவனங்களுக்கு பழங்களை கொள்வனவு செய்து விற்பனை செய்ய எற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் ஓர் கட்டமாக அறுவடை மற்றும் கொள்வனவு நிகழ்வு இன்றையதினம் காலை இடம்பெற்றது. இதன்போது ஒரு கிலோ பெசன்புரூட் பழங்களை 50 ரூபாய் வீதம் 15 ஆயிரம் கிலோ பழங்களை இலங்கையின் முன்னணி நிறுவனமான ‘கார்கில்ஸ்’ கொள்வனவு செய்திருந்தது.

இந்நிகழ்வில் கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் இ.விஜயகுமார், உத்தியோகத்தர்கள் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
To Top