தாராபுரத்தில் தொடர்ந்தும் கொரோனா பரிசோதனை .புத்தளத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் ஒருவர் தாராபுரத்தில் மரண நிகழ்வொன்றுக்குச் சென்றிருந்தமை பற்றிய தகவல் வெளியானதையடுத்து நேற்று முன்தினம் அப்பகுதியை பாதுகாப்பு படையினர் தனிமைப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில், இன்றும் அங்கு கொரோனா பரிசோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளது. பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இதனால் முடக்கப்பட்டுள்ள அதேவேளை முன்னாள் பிரதியமைச்சர் காதர் மஸ்தானும் இதில் உள்ளடங்குகின்றார்.

முதற்கட்டமாக ஒரு வார காலத்துக்கு இப்பகுதி முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தாராபுரத்தில் தொடர்ந்தும் கொரோனா பரிசோதனை . தாராபுரத்தில் தொடர்ந்தும் கொரோனா பரிசோதனை . Reviewed by ADMIN on April 10, 2020 Rating: 5