ஒரு புறம் நாய் மறுபுறம் மனிதன்: வீதியில் கொட்டிய பாலை பகிரும் பரிதாபம்


உத்தரபிரதேசத்தில் சாலையில் கொட்டிக் கிடந்த பாலை தெரு நாய்களுடன் மனிதரும் பகிர்ந்து கொண்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே ராம் பாஹ் சவுரஹா என்ற பகுதியில் பால் கொண்டு சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. இதனை அடுத்து பால் முழுவதும் சாலையில் கொட்டியது. ஆறாக ஓடிய பாலைக் கண்டதும் அங்கிருந்த தெரு நாய்கள் ஓடி வந்து குடிக்கத் தொடங்கின. அதேநேரத்தில் அந்த வழியாக வந்த நபர் ஒருவர், தான் வைத்திருந்த ஒரு சிறிய பாத்திரத்தில் தரையில் இருந்து பாலை கைகளால் அள்ளி ஊற்றி எடுக்கத் தொடங்கினார்.

இரு தினங்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போதும் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஊரடங்கு நேரத்தில் மக்களின் மறுபகுதி இப்படியாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்
ஒரு புறம் நாய் மறுபுறம் மனிதன்: வீதியில் கொட்டிய பாலை பகிரும் பரிதாபம்  ஒரு புறம் நாய் மறுபுறம் மனிதன்: வீதியில் கொட்டிய பாலை பகிரும் பரிதாபம் Reviewed by ADMIN on April 15, 2020 Rating: 5