தராவீஹ் தொழுகைகளை சம்மந்தமாக சவூதி அரேபியா வெளியிட்ட செய்தி..
சவூதி அரேபிய மக்கள் ரமழான் மாதத்தில் தராவீஹ் தொழுகைகளை தமது வீட்டிலேயே தொழுது

கொள்ள வேண்டும் என அந்நாட்டு இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தஃவா வழிகாட்டலுக்கான அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன் கொரோனா வைரஸ் அபாயம் நீங்கும் வரை பள்ளிவாசல்களில் தொழுகை நடாத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படமாட்டாது என்றும் அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.தராவீஹ் தொழுகைகளை இடைநிறுத்தியதை விடவும் ஐவேளை தொழுகைகளை இடைநிறுத்தியமை முக்கியமானதாகும். மக்களின் நலனுக்காகவேண்டி தராவீஹ் தொழுகைகள் வீட்டில் நடந்தாலும் சரி பள்ளிவாசலில் நடந்தாலும் சரி அவற்றை ஏற்றுக் கொள்ளுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம் என சவூதி அரேபிய இஸ்லாமிய விவகார அமைச்சர் கலாநிதி அப்துல் லத்தீப் அஷ்ஷெய்க்கினை மேற்கோள்காட்டி கல்ப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தராவீஹ் தொழுகைகளை சம்மந்தமாக சவூதி அரேபியா வெளியிட்ட செய்தி.. தராவீஹ் தொழுகைகளை சம்மந்தமாக சவூதி அரேபியா வெளியிட்ட செய்தி.. Reviewed by ADMIN on April 14, 2020 Rating: 5