ஊரடங்கின் போது சீட்டு விளையாடியவர்களுக்கு விடுத்த எச்சரிக்கை!கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்புக்காக, ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் வெளியில் செல்வதையும், ஒன்று கூடுவதையும் தவிர்க்கும்படி பொலிஸார் தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸார் பகல் மற்றும் இரவு வேளைகளில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த பொலிஸ் பிரிவில் நேற்றிரவு சீட்டு விளையாட்டில் ஈடுபட்ட குழுவினரை மடக்கிப் பிடித்த பொலிஸார் அவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இனிவரும் காலங்களில் இவ்வாறான விளையாட்டுக்களில் ஈடுபட்டால் கைது செய்யப்பட்டு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொலிஸார் எச்சரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கின் போது சீட்டு விளையாடியவர்களுக்கு விடுத்த எச்சரிக்கை!  ஊரடங்கின் போது சீட்டு விளையாடியவர்களுக்கு விடுத்த எச்சரிக்கை! Reviewed by ADMIN on April 15, 2020 Rating: 5