இன்று காலை 6 மணிக்கு மஸ்கெலியா உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களுக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மஸ்கெலியா மக்கள் பெருமளவில் வங்கிகளில் பணத்தை மீள பெற வரிசையாக காத்து நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
வங்கிகளில் சேவை வழங்குனர்கள் குறைவாக உள்ளதனால் மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
மஸ்கெலியா நகரிலுள்ள மக்கள் வங்கி, கொமர்ஷியல் வங்கி, இலங்கை வங்கி, ஹட்டன் நெசனல் வங்கி ஆகியவற்றில் மக்கள் நீண்ட வரிசையில் கடும் வெப்பத்தையும் பொருட்படுத்தாது காத்து நின்றனர்.
நெருக்கடியான சூழ்நிலையில் வங்கிகள் காலை 6 :30 மணிக்கு தமது சேவையை ஆரம்பிப்பதன் மூலமும் வங்கியில் சேவையாளர்களை அதிகரிப்பதன் மூலமாகவும் இவ்வாறான அசௌகரியத்தை தவிக்க முடியும் என மக்கள் எதிர்பார்கின்றமை குறிப்பிடத்தக்கது.