இலங்கையில் முதல்முறையாக நிகழ்ந்த தண்ணீர்ப் பிரசவம் !
இலங்கையில் முதற்தடவையாக தண்ணீர் மூலமாக குழந்தை பிரசவிக்கும் முறைமையின் ஊடாக பிரவசம் நிகழ்ந்துள்ளது.

கொழும்பு நைன்வேல்ஸ் தனியார் வைத்தியசாலையில் இந்த குழந்தை பிரசவிக்கும் முறை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

பிக்மீ புட்ஸ் என்கிற மிகவும் பிரசித்தமான வீட்டிற்கு வீடு உணவு பகிரும் வர்த்தக நாமத்தின் நிறைவேற்று அதிகாரியான மேவன் பீரிஸ் என்பரது மனைவிக்கே இவ்வாறு தண்ணீர் பிரசவம் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் முதல்முறையாக நிகழ்ந்த தண்ணீர்ப் பிரசவம் !  இலங்கையில் முதல்முறையாக நிகழ்ந்த தண்ணீர்ப் பிரசவம் ! Reviewed by ADMIN on April 15, 2020 Rating: 5