நேற்று இரவு 10 மணிமுதல் இன்று காலை 4 மணிவரையான ஊரடங்கு... 143 பேர் கைது , 45 வாகனங்கள் பறிமுதல் .

ADMIN
1 minute read
0

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டத்திற்கு புறம்பாக செயற்பட்டதாக இதுவரையில் 66 ஆயிரத்து 662 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 18 ஆயிரத்து 778 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் நாடு பூராகவும் ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது நாடளாவிய ரீதியில் ஊரடங்கு தளர்த்தப்ட்டிருப்பதுடன் ஒவ்வொரு நாளும் இரவு 10 மணிமுதல் காலை 4 மணிவரை ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டு வருகின்றது.

அதற்கமைய நேற்று வியாழன் இரவு 10 மணி முதல் இன்று காலை 4 மணி வரையான 6 மணித்தியால காலத்தில் மாத்திரம் ஊரடங்குச் சட்டத்தை மீறியமை தொடர்பில் 143 பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன் இவர்களிடமிருந்து 45 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி முதல் நேற்று காலை ஆறு மணிவரையில் ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்டதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக 21 ஆயிரத்து 787 வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களுள் 8671 பேருக்கு எதிராக தன்டணையும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.
To Top