10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை : பல பகுதிகளில் அடைமழை!!



இலங்கையின் தென்மேற்குப் பகுதியில் மீண்டும் அடைமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வட மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் 75 மில்லி மீற்றர் வரையான அடை மழை பெய்ய கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் ஊடாக மணிக்கு 50 – 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் மின்னலினால் ஏற்படுகின்ற ஆபத்துக்களை குறைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


இதேவேளை, 10 மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாயம் தொடர்ந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, காலி, மாத்தளை, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை, கொழும்பு, கேகாலை, குருணாகல், கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு இன்று 2.30 மணிவரை குறித்த மண் சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.


கடந்த 24 மணித்தியாலத்தில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை இரத்தினபுரி மாவட்டத்தில் பெய்துள்ளது. மண் சரிவு ஆபத்து அதிகம் உள்ள பகுதி மக்கள் பாதுகாப்பாக அந்த பிரதேசங்களில் இருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம, எலபாத, கலவான மற்றும் கிரிஎல்ல ஆகிய பிரதேச செயலகத்திற்கு இந்த அவதான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை : பல பகுதிகளில் அடைமழை!!  10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை : பல பகுதிகளில் அடைமழை!! Reviewed by ADMIN on May 22, 2020 Rating: 5