ஒரே நாளில் 11231 பேருக்கு கொரோனா தொற்று நடந்தது என்ன?ரஷ்யாவில் ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 11231 பேருக்கு தொற்று உறுதியானது.


இதை அடுத்து நாட்டின் மொத்த தொற்று எண்ணிக்கை 1,77,160 ஆக அதிகரித்துள்ளது. 


கடந்த 24 மணி நேரத்தில் 88 பேர் கொரோனாவுக்கு பலியானதை தொடர்ந்து இறப்பு எண்ணிக்கையும் 1,625 ஆக உயர்ந்தது.


ரஷ்யாவின் கொரோனா ஹாட்ஸ்பாட்டான மாஸ்கோவில் நேற்று மட்டும் புதிதாக 6,703 பேருக்கு தொற்று உறுதியானதாக தெரிவித்துள்ள மேயர் செர்கி சோபியானின் (Sergei Sobyanin), நகரத்தில் சோதனைகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதால் இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது என விளக்கம் அளித்துள்ளார்.
ஒரே நாளில் 11231 பேருக்கு கொரோனா தொற்று நடந்தது என்ன? ஒரே நாளில் 11231 பேருக்கு கொரோனா தொற்று  நடந்தது என்ன? Reviewed by ADMIN on May 07, 2020 Rating: 5