கழிவறை குழியில் விழுந்த 14 வயது மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்!!!!


பாடசாலை மாணவி ஒருவர் கழிவறை குழியில் விழுந்து பரிதாபமாக உ யிரிழந்துள்ளார். சம்பவத்தில் உ யிரிழந்த மாணவி உடுபில-இசிகிணிகந்த பிரதேசத்தில் வசித்து வரும் 14 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

கழிவறைக் குழிக்கு மேல் அமைக்கப்பட்டுள்ள கொங்ரீட் தரையில் சிறுமி இருந்ததாகவும். திடீரென பாரிய சத்தத்துடன் அது உடைந்து சிறுமி உள்ளே விழுந்ததாக குறித்த சிறுமியின் தந்தை காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கம்பஹா பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்கு பின் குடும்பத்தினரிடம் கையளிக்கப்படவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான சிறுமியின் தாய் கம்பஹா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கழிவறை குழியில் விழுந்த 14 வயது மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்!!!!  கழிவறை குழியில் விழுந்த 14 வயது மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்!!!! Reviewed by ADMIN on May 31, 2020 Rating: 5